» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா: நாலுமாவடியில் 7ம்தேதி நடைபெறுகிறது!
சனி 2, ஜூலை 2022 4:09:14 PM (IST)

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் புது வாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் நாச ரேத் மெயின் ரோட்டில் புது வாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஜூலை 7ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடை பெறுகிறது. விழாவிற்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகிக்கிறார்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் எம். அப்பாவு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ஆர்.இராதா கிருஷ்ணன், பி.கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை புது வாழ்வு சங்க செயலாளர் டாக்டர் அன்புராஜன் தலைமையில் இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார் முன்னிலையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்: விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி சாவு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:45:17 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் முத்துரம் உரம் : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்!!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:57:06 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:45:27 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி : வாலிபர் கைது!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:15:09 PM (IST)
