» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீர் மாயம்

சனி 2, ஜூலை 2022 3:17:38 PM (IST)

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் ஒருவர் திடீரென காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி முத்தையா புரம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தெர்மல் அனல்மின் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு காளீஸ்வரி (21) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சென்னை மாதவரத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவரை காளீஸ்வரி காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் அவர் கணவருடன் சென்னையில் வசித்து வந்தார். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து கணவரை பிரிந்து காளீஸ்வரி தூத்துக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்தநிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி வீட்டில் இருந்த காளீஸ்வரி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தாய் காளியம்மாள் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

PERIAVAR VAAKKU.Jul 2, 2022 - 03:37:53 PM | Posted IP 162.1*****

பெண்கள் டிவி சீரியல் பார்த்து வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள். சீரியலில் யார் குடும்பத்தை யார் கெடுப்பது என்று தான் காட்டுகிறார்கள். தமிழ் சேனல்களில் சீரியலை தடைபண்ணவேண்டும் அப்போதுதான் தமிழ் குடும்பம் சீரழிந்துபோகாது...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory