» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம்: ஆட்சியர் தகவல்

சனி 2, ஜூலை 2022 12:53:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு நீர்ப்பாசன விவசாயம் நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.14 லட்சத்து 84 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தாமிரபரணி உபவடிநில பகுதிகளில் 12 எக்டேர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட உள்ளது.

வெண்டை, தர்பூசணி, மிளகாய், கத்தரி போன்ற காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 5 எக்டேருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ரேஷன் கார்டு நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு  ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory