» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும்: மேயர்

சனி 25, ஜூன் 2022 12:06:06 PM (IST)



தூத்துக்குடி மாநராட்சி பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாநகராட்சி நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் தூய்மை தூத்துக்குடி திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மச்சாது நகர் பகுதியில் அமைந்துள்ள நுண் உர செயலாக்க மையத்தில் வைத்து திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து கையாளுவது தொடர்பான  கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் நேரடியாக செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் கூறுகையில் "தூத்துக்குடி மாநகராட்சியில் நாள்தோறும் 180 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்படும் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக பிரித்தெடுக்கப்பட்டு  11 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உருவாக்கப்படுகின்றன. 

தினசரி சேகரிக்கப்படும் 180 டன் குப்பைகளில் 60 டன் குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரிக்காமலே கொடுக்கின்றனர். எனவே இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தபடுகின்றன. தூத்துக்குடி மாநகராட்சியில் தேவைக்கேற்ப கூடுதலாக நுண் உர மையம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். 



உதவி ஆணையர்கள் சரவணன், தனசிங், நகர்நல அலுவலர் அருண், சுகாதார ஆய்வாளர் ஹரிகனேஷ் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வீ கேன் டிரஸ்ட் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம், மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து

NameJun 28, 2022 - 07:15:32 PM | Posted IP 162.1*****

Apuram 60 rs tax yethuku podurangalam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory