» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரவுடி கைது

வியாழன் 23, ஜூன் 2022 12:10:00 PM (IST)

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ரவுடியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது கதிரேசன் கோவில் மலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், அவர் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் முத்துகுமார் (28) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் முத்துகுமாரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட முத்துகுமார் மீது கோவில்பட்டி மேற்கு, கோவில்பட்டி கிழக்கு மற்றும் கயத்தாறு ஆகிய காவல் நிலையங்களில் 14 வழக்குகள் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory