» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தகராறில் தீக்குளித்த கொத்தனார் சாவு : தூத்துக்குடி அருகே பரிதாபம்!!
வியாழன் 23, ஜூன் 2022 10:39:50 AM (IST)
தூத்துக்குடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கொத்தனார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள முத்துகுமாரபுரம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் ராமசுப்பு (46). கொத்தனார் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனமுடைந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் உடல் கருகி ராமசுப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் உரங்கள் ஏற்றுமதி : மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஆய்வு
சனி 2, ஜூலை 2022 8:46:58 PM (IST)

திருமணமாகி 7மாதத்தில் இளம் பெண் மாயம்
சனி 2, ஜூலை 2022 8:40:16 PM (IST)

சர்வேகல், தடுப்பு வேலி சேதம்: தாய், மகன் மீது வழக்கு
சனி 2, ஜூலை 2022 8:36:07 PM (IST)

ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.
சனி 2, ஜூலை 2022 8:26:52 PM (IST)

தூத்துக்குடி காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு!
சனி 2, ஜூலை 2022 5:05:45 PM (IST)

புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா: நாலுமாவடியில் 7ம்தேதி நடைபெறுகிறது!
சனி 2, ஜூலை 2022 4:09:14 PM (IST)
