» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஊரகப் பகுதிகளில் 23ம் தேதி மின்தடை

செவ்வாய் 21, ஜூன் 2022 8:59:14 PM (IST)

தூத்துக்குடி ஊரகப் பகுதிகளில் வருகிற 23ம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி ஊரக மின்வாரிய செயற்பொறியாளர் பத்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட குலையன்கரிசல், போடம்மாள்புரம், திருமலையாபுரம், பேய்குளம் ஆகிய பகுதிகளிலும், வல்லநாடு மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட எல்லை நாயக்கன்பட்டி, ராமநாதபுரம், பத்மநாபமங்கலம் குவாரி ஆகிய பகுதிகளிலும், குளத்தூர் மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட வைப்பார் உப்பளம் பகுதியிலும், 

சாயர்புரம் மின் விநியோகப் பிரிவுக்க உட்பட்ட இருவப்பபுரம், சோலை புதூர் ஆகிய பகுதிகளிலும், பழையகாயல் மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட கோவங்காடு உப்பளம் பகுதிகளிலும் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி நடக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory