» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றை தலைமை : தெற்கு மாவட்ட அதிமுக தீர்மானம்!

திங்கள் 20, ஜூன் 2022 5:49:14 PM (IST)அ.இ.அதிமுக-வில் எடப்பாடி கே. பழனிசாமியில் ஒற்றைத் தலைமை அமைய வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள்  கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தான் வரவேண்டும், அது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தான் வரவேண்டும் அதையே அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் விரும்புகின்றனர் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 20.06.2022 அன்று காலை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிகழ்விற்கு அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்து மாவட்ட நிர்வாகிகள் அவர்களின் கருத்துக்களை கூறினர் அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 100 சதவிகீதம் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.  மேலும் பொதுக்குழுவில் திட்டமிட்டபடி பங்கேற்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்டக் கழக இணைச் செயலாளர் செரினா பாக்கியராஜ், துணைச் செயலாளர்கள் எம்.வசந்தா, ஏ.சந்தனம், பொருளாளர் அமலிராஜன், ஓன்றியக் கழக செயலாளர்கள் இராமச்சந்திரன், காசிராஜன், தாமோதரன், விஜயகுமார், ராஜ்நாராயணன், சௌந்தரபாண்டி, பகுதிக் கழக செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, சேவியர், முருகன், நகரக் கழகச் செயலாளர்கள் டாக்டர். காயல் மௌலானா, மகேந்திரன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், சோமசுந்தரம், செந்தமிழ்சேகர், கிங்சிலி,  உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துக்கொண்டனர்.


மக்கள் கருத்து

அரிJun 21, 2022 - 02:24:54 PM | Posted IP 162.1*****

மாவட்ட்ட அவமானங்கள் இவர்கள்

ராமநாதபூபதிJun 21, 2022 - 10:33:14 AM | Posted IP 162.1*****

கூவத்தூர்ல எடப்பாடி பழனிசாமியை அம்போன்னு விட்டுட்டு ஓடுற பஸ்ல இருந்து இறங்கி பன்னீர்செல்வம் தான் கழகத்தை காக்கவந்த வீரனு சொல்லி பேட்டியெல்லாம் கொடுத்துட்டு இன்னைக்கு அதே கூவத்தூர் போற பஸ்லயே ஏறுறிங்களே. நீங்கல்லாம் யாரு சார்.இதுக்குதான் அந்த அம்மா உங்களையெல்லாம் ஊமையா வைச்சிருந்துச்சா சார்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory