» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுத் தேர்வில் சாதனை: ஆட்சியர், எஸ்பி பாராட்டு!

திங்கள் 20, ஜூன் 2022 5:42:39 PM (IST)



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி பாலாஜி சரணன் ஆகியோர் பாராட்டினர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 833 மாணவர்கள், 11 ஆயிரத்து 461 மாணவிகள் ஆக மொத்தம் 22 ஆயிரத்து 294 பேர் எழுதினர். இதில் 9 ஆயிரத்து 615 மாணவர்கள், 11 ஆயிரத்து 91 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 706 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 92.88 சதவீதம் ஆகும். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சியில் 9-வது இடத்தை பிடித்து உள்ளது.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 803 பேர் தேர்வு எழுதியதில் 6 ஆயிரத்து 256 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 91.96 சதவீதம் தேர்ச்சி ஆகும். தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 241 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 9 ஆயிரத்து 692 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.64 சதவீதம் ஆகும். திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 250 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 4 ஆயிரத்து 758 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 90.63 சதவீதம் தேர்ச்சி ஆகும். 



இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில்  முதலிடம் பிடித்த திருச்செந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளி மாணவி துர்க்கா, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில முதல் இடம் பிடித்த தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கர்பகா ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி பாலாஜி சரணன் ஆகியோர் பாராட்டினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory