» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கால்நடை பராமரிப்புத்துறையில் ஆட்சேர்ப்பு முகாம் வதந்தி: பொதுமக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

வியாழன் 16, ஜூன் 2022 3:45:18 PM (IST)

கால்நடை பராமரிப்புத்துறை பணி தொடர்பாக தவறான தகவலை நம்பி  பொது மக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கால்நடை பராமரிப்புத் துறையில் 90 மணி நேர பயிற்சி அளித்து ரூ.15ஆயிரம்  முதல் ரூ.18ஆயிரம் வரை சம்பளத்தில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது எனவும், இதற்கான பணி நியமன ஆணை ஜீன் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் எனவும் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறும் மோசடி தகவல் புலனம் சமூக ஊடகம் வழியாக பரவி வருகிறது.

கால்நடை பராமரிப்புத்துறைக்கு சம்பந்தமில்லாத தவறான இந்த தகவலை நம்பி  பொது மக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory