» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக ஆளுநர் 18ம் தேதி தூத்துக்குடி வருகை: வ.உ.சி., 150 பிறந்த ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்!

புதன் 15, ஜூன் 2022 4:27:18 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ள வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். 

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாள் விழா கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா தூத்துக்குடி கிளை சார்பில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு புத்தகத்தை வெளியிடுகிறார். 

இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர் மகாதேவன், பத்மஸ்ரீ விருது பெற்ற ஷோகோ கார்பரேசன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தஞ்சாவூர் ராமகிருஷ்ணா மடத் தலைவர் சுவாமி விமூர்தானந்தா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர துணைத் தலைவர் சகோதரி நிவேதிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். விழா ஏற்பாடுகளை  விவேகானந்த கேந்திரா தூத்துக்குடி கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory