» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில்  இரவு காவலர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக மைய கட்டிடத்தில் காலியாகவுள்ள முழு நேர இரவு காவலர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடம் ஒன்று தற்காலிக தினக்கூலி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கு தமிழ் எழுதப்படிக்க தெரிந்த ஆண் நபர்களாக இருக்க வேண்டும். மேலும் 01-01-2022 அன்று 25 வயதிற்கு மேல் 45 வயது முடியாதவராக இருக்க வேண்டும். 

இப்பணியிடத்திற்கு SC Aruthathiyar –க்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிக பணியிடம், இப்பணியிடத்திற்கான ஊதியம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட தினக்கூலி அடிப்படையில் வழங்கப்படும். எனவே விருப்பமும் தகுதியுள்ள உள்ள நபர்கள்   10-06-2022-க்குள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory