» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காவல் நிலையத்தில் பெண்ணை அடித்து துன்புறுத்தல் : எஸ்ஐ, 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்!

புதன் 18, மே 2022 10:54:30 AM (IST)

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பெண்ணை அடித்து துன்புறுத்திய விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தனிப்பிரிவு காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி, முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் பிரபாகரன் (45), இவரது வீட்டில் கடந்த 4ம் தேதி 10 பவுன் நகை மாயமானது. இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகம் மனைவி சுமதி (40) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 7ம் தேதி பெண் காவலர்கள் மூவர் சுமதியை முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

மேலும் அவர்கள் மூவரும் சுமதியை கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் காயம் அடைந்த சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் பெண் காவலர்கள் தன்னை துன்புறுத்தியதாக அவர் கடந்த 11ம் தேதி எஸ்பியிடம் மனு அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். 

விசாரணையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 15ம் தேதி பெண் காவலர்கள் மூவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு காவலரை  ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்தும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார். 

இதனிடையே இந்த விவகாரத்தில் தூத்துக்குடி எஸ்பி பரிந்துரையின் பேரில், முத்தையாபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை-மகனை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

Mariமே 18, 2022 - 06:05:47 PM | Posted IP 162.1*****

Police inactive but lass is humen

M.Balaguruமே 18, 2022 - 03:32:53 PM | Posted IP 162.1*****

இந்த காவல் நிலையத்தில் கடந்த காலங்களில் ஒரு தரப்புக்கு ஆதரவாக பொய் வழக்கு போடுவது நடந்தது உண்டு. இனி காவலர்களின் போக்கு மாறும் என எதிர்பார்க்கலாம்.M.Balaguru

Jeorgeமே 18, 2022 - 11:05:21 AM | Posted IP 162.1*****

Good Action Sp Sr

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory