» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உலக இரத்தழுத்த தின விழிப்புணர்வு நடைபயிற்சி : அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி பங்கேற்பு

செவ்வாய் 17, மே 2022 12:43:30 PM (IST)



தூத்துக்குடியில் உலக இரத்தழுத்த தினத்ததை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயிற்சியினை கனிமொழி எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.  

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரோச் பூங்காவில் உலக இரத்தழுத்த தினத்ததை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயிற்சியினை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்து, இன்று (17.05.2022) நடைபயிற்சி மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: உலக அளவில் இன்று (மே 17-ம் தேதி) உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தொற்றா நோய்களில் ஒன்றான உயர் இரத்த அழுத்தம் தற்போது மாறிவரும் உணவு பழக்கவழக்கங்களாலும் வாழ்க்கை நடைமுறை மாற்றங்களாலும் நம்மில் பலருக்கு குறிப்பிட தகுந்த அளவு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. உலக அளவில் உயர் இரத்த அழுத்த தாக்கமானது, உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் பேரும், இந்திய அளவில் 30 சதவீதம் பேரும், தமிழ்நாட்டில் 34 சதவீதம் பேரும் உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் இருதயம், சிறுநீரகம், கண்பார்வை பாதிப்பு, மூளை பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியில் உயிரிழப்பில் முடிய வாய்ப்புள்ளது. இதை தவிர்த்திட இன்று (17.05.2022) காலை 7 மணி முதல் 9 மணி வரை விழிப்புணர்வு நடைபயிற்சி தூத்துக்குடி மாநகராட்சியில் ரோச் பூங்கா, நகராட்சி, பேருராட்சி மற்றும் வட்டார அளவிலான தலைமையிடங்களிலும் நடைபெற்றது. அவ்வமயம் பொதுமக்கள் அனைவருக்கும் உயர் இரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படுகிறது.

இன்றைக்கு உலக உயர் ரத்த அழுத்த தினம் ஏன் கொண்டாடுகிறோம் என்றால் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குதான். இன்றைய தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபயிற்சியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்கள். பொதுமக்கள், மாமன்ற உறுப்பினர்களும் பரிசோதனை செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைய பேர் வீட்டில் பரிசோதனை செய்தாலும் இன்றைக்கும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இரத்த அழுத்தத்தால் கண், கிட்னி, இதயம் பாதிக்கப்படும்.

நமது மாவட்டம் முழுவதும் 450 மருத்துவ பணியாளர்களை கொண்டு 752 நடமாடும் முகாம்கள் நடத்தப்படுகிறது. எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு நடைபயிற்சி நடத்துகிறோம். அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பள்ளிகள், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு சென்று காலை 9 மணி முதல் 11 மணி வரை அங்கு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் இன்றைக்கு ஒரு நாள் மட்டும் பரிசோதனை செய்து உயர் ரத்த அழுத்தம் நோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களது நல்ல வாழ்க்கைக்கு உரிய மருந்துகள் வழங்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் இரத்த அழுத்த பரிசோதனை செய்திட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.



நிகழ்ச்சியில் இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர்கள் பொற்செல்வன், போஸ்கோராஜா, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குமரன், நகர்நல மருத்துவர் அருண்குமார், தொற்றாநோய் ஒருங்கிணைப்பாளர் ஸ்ருதி, இந்திய மருத்துவ கூட்டமைப்பு சிவசைலம், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ம.செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory