» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பளுதூக்கி, நகரும் படிக்கட்டு அமைக்க வேண்டும் : வைகோ கோரிக்கை

செவ்வாய் 17, மே 2022 10:43:50 AM (IST)

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பளுதூக்கி, நகரும் படிக்கட்டு அமைக்க வேண்டும் என்று தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தென் தமிழ்நாட்டில், கோவில்பட்டி நகரம் ஒரு முதன்மையான வணிக மையம் ஆகும். நூற்பு ஆலைகள், சிறு குறு தொழில்கள், பருத்தி, கடலை மிட்டாய்,மிளகாய், வெள்ளரிக்காய் உட்பட எத்தனையோ பொருட்கள் இங்கிருந்து இந்தியா முழுமையும் செல்கின்றன. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இந்தியப் படையிலும், துணைப் படைகளிலும் பணிபுரிகின்றார்கள். கோவில்பட்டி தவிர, விளாத்திகுளம், எட்டையபுரம், ஒட்டப்பிடாரம் பகுதி மக்களும் கோவில்பட்டிக்கு வந்துதான் தொடரிகளில் பயணிக்கின்றார்கள்.

ஒவ்வொரு நாளும், 30 ரயில்கள், கோவில்பட்டி வழியாகச் செல்கின்றன. ஆனால், சில ரயில்கள் இங்கே நிற்பது இல்லை. அனைத்துத் ரயில்களும், கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.கோவில்பட்டி ரயில் நிலையத்தின் தண்டவாளங்களைக் கடந்து மறுபுறம் செல்ல, சுமைகளுடன் நடைப் பாலப் படிக்கட்டுகளில் ஏற முடியாமல், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், சிரமப்படுகின்றார்கள். எனவே, பளுதூக்கியும், நகரும் படிக்கட்டும் அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து

JJDOHAQATARமே 17, 2022 - 11:13:03 AM | Posted IP 162.1*****

அன்புள்ள வைகோ சார், 4 ரயில் வந்து போக வழி பண்ணுங்க. ithu விஷயமாக நீங்களும், மேடம். கனிமொழியும் முயர்ச்சி எடுக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory