» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை கல்குவாரி விபத்துக்கு அதிகாரிகளே காரணம் : கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

செவ்வாய் 17, மே 2022 10:00:25 AM (IST)

நெல்லை கல்குவாரியில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததே விபத்துக்கு காரணம்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மோடி அரசின் மிக மோசமான செயல்பாடுகளில் ஒன்று சமையல் எரிவாயு விலை உயர்வு ஆகும். தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும், போலீஸ் காவலில் கைதிகள் இறக்கும் லாக்-அப் இறப்பில் 2 வகைகள் உண்டு. இதற்கு முன்பு இருந்த அரசுகள் போலீஸ் காவலில் கைதிகள் இறப்பதை நியாயப்படுத்த முயற்சித்தனர்.

தற்போதைய அரசு லாக்-அப்பில் இறப்பு நடந்தால் அதை கண்டிக்கின்றது. சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தண்டனை தரப்படுகிறது. போலீசார் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் தற்போதைய அரசின் போக்கு சரியானது. நெல்லை அருகே கல்குவாரியில் விபத்து நடந்து உள்ளது. கல்குவாரிகளுக்கு எப்போதுமே ஆய்வு உண்டு. ஆனால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை. இதுதான் தவறு. கல்குவாரிகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து இருக்காது. அதிகாரிகள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து

ஆம்மே 17, 2022 - 11:18:40 AM | Posted IP 162.1*****

அளவுக்கு மீறி அதிக பண ஆசை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory