» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடல்சார் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!

திங்கள் 16, மே 2022 4:07:33 PM (IST)



தூத்துக்குடியில் கடல் சார்ந்த "திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் கடல்சார் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல்" தொடர்பான பயிற்சி முகாமை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் உணவுப்பொருட்கள் தொழில் பயிற்சி முகாம்  தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பயிற்சி கையேடு மற்றும் மீன்வள தொழில் மேம்பாடு குறித்த கையேட்டை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் ஆகியோர் பெற்றுக்கொண்டார். 

விழாவில் பேசிய கனிமொழி எம்பி, "கடல் உணவு பொருட்கள் உலக அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கக் கூடியதாக உள்ளது. 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு மட்டும் இந்த இந்த துறையில் சந்தை வளர்ச்சி 122 மடங்கு உயர்ந்துள்ளது. இருந்தபோதும் உலகச் சந்தையில் தமிழகம் 4.8 சதவீதம் மட்டுமே அடைந்துள்ளது. பொருளாதார வாய்ப்புள்ள இந்த சந்தையில் தமிழக மக்கள் அதிக அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கடல் உணவுப் பொருட்களில் புதிய மதிப்புக்கூட்டு பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில்.. "தொழில் துறையில் தமிழகம் உயரவும்,பொருளாதார ரீதியாக தமிழகம் உயரவும் பல திட்டங்களை தமிழக முதலமைச்சர் தந்து வருகிறார். மீன் உணவு பொருட்களை தயாரிப்பதற்க்கும், விற்பதற்கும் பல்வேறு பயிற்சிகளை  தொடர்ந்து இந்த துறை சார்பில் அளித்து வருகிறோம். தமிழகத்தில்  உணவு பொருட்கள் மூலமாக அதிக வருவாய் ஈட்ட தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறினார். 

நிகழ்ச்சியில்அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்.. இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியானது மீன் கடல் உணவுப் பொருட்களுக்கான பயிற்சி மட்டுமன்றி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பு தொழில், பனைத்தொழில் போன்றவற்றின் மேம்படுத்துவதற்கான பயிற்சிகளையும் அளித்து அவர்களுக்கு உரிய கடன் உதவிகளையும் வழங்க வேண்டும் என்றார்.

விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார், தூத்துக்குடி மீன்வள பல்கலைக்கழக முதல்வர் சாந்தகுமார், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி பொது மேலாளர் ரவீந்திரன், தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில்... 

முன்னதாக கோவில்பட்டியில் அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாமை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார். விழாவில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகரச் சேர்மன் கருணாநிதி, அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டர் இயக்குனர் ஹர்ஷத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

kumarமே 17, 2022 - 01:39:06 PM | Posted IP 162.1*****

payirchi kuritha pothu arivippu eppothu veliyanathu? entha entha nalithalgalil veliyanathu? eththanai arvam ulla pothu makkal intha payirchiyil kalanthukondanar?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory