» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவி : குடும்பத் தகராறில் பயங்கரம்!
சனி 14, மே 2022 10:34:04 AM (IST)
செய்துங்கநல்லூர் அருகே குடும்பத் தகராறில் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கீழநட்டார்குளம் கிராமம், சூசையப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் திருப்பதி ராஜா (28). இவரது மனைவி வசந்தி (25). இந்த தம்பதியருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், வசந்தி கணவர் திருப்பதி ராஜா மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார். இதில் உடல் வந்து படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) அன்னராஜ், கொலை முயற்சி வழக்குப் பதிந்து வசந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)

நண்பன்மே 14, 2022 - 02:17:56 PM | Posted IP 162.1*****