» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சி. துறைமுகத்திற்கு மிகப்பெரிய கப்பல் வருகை!

வெள்ளி 13, மே 2022 5:39:47 PM (IST)தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு முதன் முறையாக 300  மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய கப்பல் வந்தடைந்தது.

நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மேற்கத்திய நாடான ரியூனியன் துறைமுகத்திலிருந்து வஉசி துறைமுகத்தில் உள்ள தக்சின் பாரத் சரக்கு முனையத்துக்கு 300 மீட்டா் நீளமும், 40 மீட்டா் அகலமும் கொண்ட ‘எம்எஸ்சி பேட்ரா’ என்ற மிகப் பெரிய சரக்கு கப்பல் இன்று வந்தது. தூத்துக்குடிக்கு முதல்முறையாக வந்துள்ள இத்தகைய 300மீ. நீள சரக்கு கப்பல் 6,627 சரக்குப் பெட்டக கொள்ளளவைக் கொண்டது. 

அதிலிருந்து 2,937 சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. சாகர்மாலா திட்டத்தின் பயனாக தற்போது முதன்முறையாக இந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் கையாளப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கவேண்டிய 2,937 சரக்கு பெட்டகங்களை இறக்குமதி செய்த பின் மீண்டும் கப்பல் தூத்துக்குடியிலிருந்து இசரக்குகளை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் செல்லும்.  என துறைமுக ஆணைய நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory