» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறித்த 2பேர் கைது : பைக் பறிமுதல்!

வெள்ளி 13, மே 2022 4:16:25 PM (IST)தூத்துக்குடியில் பெண்ணிடம் 7¼ பவுன் செயின் பறித்த இளஞ்சிறார் உட்பட 2 பேரை போலீசார்  கைது செய்தனர். அவர்களது பைக் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி, குமரன் நகர் பகுதியை சேர்ந்த போஸ்கோ ராஜா மனைவி சகாய சித்ரா (52) என்பவர் கடந்த 11.05.2022 அன்று இரவு தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் போல்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சகாய சித்ராவின் கழுத்தில் இருந்த 7¼ பவுன் தங்க தாலி செயினை பறித்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து சகாய சித்ரா அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் நகர காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வராஜ், தலைமை காவலர் சுடலைமுத்து மற்றும் முதல் நிலைக் காவலர் சிவபெருமாள் ஆகியோர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டதில் லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் பின்லேடன் (20) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 17 வயதுடைய இளஞ்சிறார்  ஒருவர் ஆகிய 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று சகாய சித்ராவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பின்லேடன் மற்றும் இளஞ்சிறார் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 7¼ பவுன் தங்க செயினையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்லேடன் மீது ஏற்கனவே மத்தியபாகம் மற்றும் தாளமுத்துநகர் ஆகிய காவல் நிலையங்களில் 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பவம் நடைபெற்ற 24 மணிநேரத்தில் எதிரிகளை கைது செய்து தங்க நகையை மீட்ட  வடபாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.


மக்கள் கருத்து

அக்கினிபுத்திரன்மே 14, 2022 - 11:07:08 PM | Posted IP 162.1*****

கெண்டைக்கால் நரம்பை வெட்டிநால் இதுபோன்ற குற்றங்கள் குறையும்.

jytfyfyமே 13, 2022 - 06:14:47 PM | Posted IP 162.1*****

ethu binladen ah

J. Roselinமே 13, 2022 - 05:36:44 PM | Posted IP 162.1*****

Iptee panravankaluku correct ana thantanan ketikanum life long marakatha alavuhuku pathikka pattavanka vazhli enna nnu day life marakkatha alavhuku law strange aha erukannu😠ovoru nalu avanka pathikka pattavanka vazhlia anupavikannu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory