» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலி பத்திர பதிவு புகார்: சார் பதிவாளர் இடைநீக்கம் - சசிகலா புஷ்பா வரவேற்பு

வெள்ளி 13, மே 2022 3:51:29 PM (IST)

தூத்துக்குடியில் விவசாய நிலங்களை போலி பத்திர பதிவு செய்தது தொடர்பான பாஜக புகார் எதிரொலியாக சார் பதிவாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம் பண்ணை, கிராமத்தில் 500 விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலத்தை மோசடியாக தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பா.ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தூத்துக்குடி அருகிலுள்ள புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். 

தொடர்ந்து விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கே பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தினர். தொடர்ந்து சார்பதிவாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், பத்திரப்பதிவுத் துறை டிஐஜி கவிதா ராணி விசாரணை மேற்கொண்ட விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்ததை அடுத்து பத்திரப் பதிவாளர் மோகன்தாஸ் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஆளுங்கட்சி செய்த தவறை சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்று சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

கேள்விப்பட்டேன்..மே 15, 2022 - 08:47:25 PM | Posted IP 162.1*****

ஆமா .. அடுத்தவங்க நிலத்தை அட்டை போட நிறைய திருடர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை இல்ல டூபாக்கூர்கள் தான் அதிகம்..

Murugananthamமே 14, 2022 - 01:52:19 PM | Posted IP 162.1*****

That register, vendors,brokers, duplicate land owners are immediately arrest and punished by court otherwise all farmers loss again

அப்படியாமே 14, 2022 - 08:28:47 AM | Posted IP 162.1*****

இடைநீக்கம் பெரிய தண்டனையா ?? பிடிச்சி சிறையில் அடையுங்கள்

Balanமே 13, 2022 - 07:31:19 PM | Posted IP 162.1*****

or broke his hands

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory