» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டபொம்மன் பிறந்த நாள்விழா: ஆட்சியர் மரியாதை

வெள்ளி 13, மே 2022 12:37:25 PM (IST)



பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.  மேலும் அன்றைய தினம் கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவாகவும், வீரசக்கதேவி ஆலய திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மேலும் வீரபாண்டிய கட்டப்பொம்மன்  தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் அரசின் சார்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அதனடிப்படையில் இந்த ஆண்டும் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன்  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டியன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியராஜ், வெங்கடாசலம், வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி, வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை, ஊராட்சி மன்ற தலைவர் கமலாதேவி யோகராஜ், ஊராட்சி மன்ற 3வது வார்டு உறுப்பினர் வீரமள்ளு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

tamilanமே 13, 2022 - 05:33:58 PM | Posted IP 162.1*****

ithellam over , oril oru thalaivar thaan erukkara vera thalaivarkale illaiya, athenna oru kannil sunnampu maru kannil then

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory