» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை!

வெள்ளி 13, மே 2022 12:22:11 PM (IST)



தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகள் அருகேயுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என மாநகர நல அலுவலர் அருண்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியராஜ் மற்றும் அலுவலர்கள் மில்லர்புரம், திருச்செந்தூர் ரோடு, பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது 10 கடைகளில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், குட்கா, பான்மசாலா, பிளாஸ்டிக் பைகள் இருந்தன. அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர். அப்போது, கடை உரிமையாளர்களிடம் பள்ளி - கல்லூரி அமைந்துள்ள 100மீ தூரத்திற்கு சிகரெட் விற்க கூடாது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் கடைகளுக்கு சீல்வைக்கப்படும் என்று அறிவுறுத்தினர். மேலும் கடைகளில் இருந்த சிகெரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பர அட்டைகளை அப்புறப்படுத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory