» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

வெள்ளி 13, மே 2022 12:11:04 PM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுக அரசின் "ஒய்வறியா உழைப்பின் ஓராண்டு” சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் / அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.கழகம் தனது தோ்தல் அறிக்கையில் குறி்ப்பிட்டுள்ள 501-வாக்குறுதிகளில் 250-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அரசு பொறுப்பேற்று ஓராண்டுக்குள் நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இது மக்களுக்கான அரசு என ஒவ்வொரு நாளும் மக்களுக்கான அடிப்படைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ஓய்வறியா உழைப்பின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சட்டமன்ற தொகுதிகள்தோறும் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்ற கழகத் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் அறிவிக்கப்பட்ட கீழ்க்கண்ட தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. அனைத்து பொதுக்கூட்டங்களிலும் கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

சம்பந்தப்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா்க் கழகச் செயலாளா்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்து கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் பேச்சாளர்கள் விபரம் :

17.05.2022 செவ்வாய்கிழமை கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி காந்தி மைதானம் (பேச்சாளர்கள்: பவானி கண்ணன், தமிழ் கொண்டான்)

21.05.2022 சனிக்கிழமை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சிதம்பரநகா் பேரூந்து நிறுத்தம் எதிரில், தூத்துக்குடி (பேச்சாளர்கள்: மன்னை இளங்கோவன், பவித்திரம் கண்ணன், சரத்பாலா)

22.05.2022 ஞாயிற்றுகிழமை விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி விளாத்திகுளம், மதுரை மெயின் ரோடு, விளாத்திகுளம் (பேச்சாளர்கள்: ஆரணி மாலா, முகவை இராமா், சரத்பாலா)


மக்கள் கருத்து

P.S. RAJ அவர்களேமே 14, 2022 - 02:40:11 PM | Posted IP 162.1*****

மழைநீர் கால்வாய் இன்னும் சரியா முடிக்கவில்லை.. போட்டோஷூட் காக மட்டும் வந்துட்டு போவாங்க அவளவுதான்..

P.S. Rajமே 13, 2022 - 08:26:16 PM | Posted IP 162.1*****

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தூ.டி நகர மேம்பாட்டில் அக்கறை செலுத்த வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும். சாலை போக்குவரத்தை சீர்படுத்தி'one-way' யை ஒழுங்குபடுத்த வேண்டும். முதலில் நம்ம ஊரை கவனியுங்க!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory