» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கனிமொழி எம்.பி., மீது அவதூறு பேட்டியளித்தவர் முன் ஜாமின் மனு தள்ளுபடி
வியாழன் 12, மே 2022 10:11:52 PM (IST)
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை அவதூறாக பேசிய நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை அவதூறாக பேசி காந்தி மள்ளர் என்பவர் பேட்டியளித்திருந்தார். அவர் மீது ஜாதி பிரிவினையை தூண்டியதாக திமுக பிரமுகர் மகேஸ்வரன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காந்தி மள்ளர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விடுமுறை நீதிபதியிடம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், அவதூறு பேசிய காந்தி மள்ளர் என்பவருக்கு முன்ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபனை செய்தார். இதனையடுத்து நீதிபதி சுவாமிநாதன் அவதூறு பேசிய காந்தி மள்ளரின் முன்ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)
