» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய மே 14ல் சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்
வியாழன் 12, மே 2022 5:35:47 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள் செய்வது தொடர்பாக வருகிற 14ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)
