» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜவுளிக்கடை அதிபரின் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 12, மே 2022 3:43:01 PM (IST)
தூத்துக்குடியில் ஸ்கூட்டரில் சென்ற ஜவுளிக்கடை அதிபரின் மனைவியிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் போஸ்கோ. இவரது மனைவி சாயசித்ரா (52). இவர்கள் தூத்துக்குடியில் ரெடிமேட் ஜவுளிக் கடை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சாயசித்ரா தனது மகளுடன் மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் புதிய பஸ் நிலையம் கடந்து சென்ற போது பின்னால் பைக்கில் வந்த 2 பேர், திடீரென சாயசித்ரா கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.
இதனால் நிலை தடுமாறிய தாய்-மகள் இருவரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். இதில் காயமடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)
