» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

2500 ஏக்கர் விவசாய நிலங்கள் தனிநபருக்கு பத்திர பதிவு : சார் பதிவாளரை கண்டித்து சசிகலா புஷ்பா போராட்டம்!

வியாழன் 12, மே 2022 3:35:12 PM (IST)தூத்துக்குடியில் 2500 ஏக்கர் விவசாய நிலங்களை தனிநபருக்கு பத்திர பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளரை கண்டித்து பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம்பண்ணை, கிராமத்தில் சுமார் 500 விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலத்தை  தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த புதுக்கோட்டை சார்பதிவாளரை கண்டித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கே பத்திர பதிவு செய்து கொடுக்க வலியுறுத்தினர்.

பின்னர் சசிகலாபுஷ்பா அளித்த பேட்டியில் "சார் பதிவாளர் நாளை மதியம் 12மணிக்குள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக  உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சியில் அனைத்து முறைகேடுகளும் நடைபெறுகிறது. தமிழகத்தில் எங்கு முறைகேடு நடந்தாலும் மாநில தலைவர் அண்ணாமலை அனுமதியோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக பிஜேபி கட்சி தொடர்ந்து போராடும். 24 மணி நேரத்தில் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் வெளியில் நாளை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று சசிகலா புஷ்பா தெரிவித்தார்


மக்கள் கருத்து

K. கணேசன்.மே 13, 2022 - 09:45:18 PM | Posted IP 162.1*****

பாராட்டுக்கள். பணி சிறக்க வாழ்த்துகள்.

dupukkuமே 12, 2022 - 04:53:54 PM | Posted IP 162.1*****

தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்? haa haa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory