» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் 59 சிசிடிவி கேமராக்கள் : எஸ்பி துவக்கி வைத்தார்!
புதன் 27, ஏப்ரல் 2022 11:17:39 AM (IST)

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் தூத்துக்குடி பிரதான சாலையான விவிடி சிக்னல் முதல் பழைய துறைமுகம் வரை 9 இடங்களில் 59 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் நான்கு இடங்களில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதில் வாகனங்களில் செல்வோர் செல்பவர்கள் முகம் மற்றும் வண்டியின் நம்பர் பிளேட் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் தெரியும்படி அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் துணை பொது மேலாளர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி கணேசன் முன்னிலை வைத்தார். மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சிசிடிவி கேமரா திறந்துவைத்து தொடங்கிவைத்தார்

பின்னர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் மாற்றத்தை தேடி சமூக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது கூட்டத்தில் 36 குற்றங்களை தடுக்கும் விதமாக எஸ்பி தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் உதவி பொது மேலாளர் அருள் செழியன், தலைமை பாதுகாப்பு அதிகாரி சிந்தாமணி, தூத்துக்குடி பிரதான கிளை தலைமை மேலாளர் திலகர் பொன்துரை, வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கரன், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேசன், மத்திய பாகம் உதவி ஆய்வாளர்கள் முருகப் பெருமாள், முத்துகிருஷ்ணன், இசக்கியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)
