» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய பாலம் : மத்திய அரசு அனுமதி!

சனி 22, ஜனவரி 2022 11:35:51 AM (IST)

துாத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.70கோடி மதிப்பில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ரோடுளில், போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் தேவைப்படும் பட்சத்தில், பாலங்கள் கட்ட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், தூத்துக்குடி - நெல்லை ரோட்டில், புதுக்கோட்டையில் பாலம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பாலம் அமையும் பட்சத்தில், ஊருக்குள் செல்லும் வாகனங்கள் மட்டும் உள்ளே செல்லும். நெல்லை செல்லும் வாகனங்கள் பாலத்தின் மேல் சென்று விடும். இந்த பணிகளை 2 மாதத்திற்குள் முழுமையாக முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், துாத்துக்குடி ஆட்சியர் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் இருந்து சற்று தள்ளி உள்ளது. இதனால் நெடுஞ்சாலை ரோட்டில் வந்துதான், ஆட்சியர் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். இது தவிர எஸ்.பி., அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், வேளாண்மை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலகங்களும் இங்கு இருப்பதால், வாகனங்களில் அதிகமானவர்கள் இங்கு வருகின்றனர். 

இதன் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக, எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாகி வருகிறது. அதுவும், திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் என்றால், ஆட்சியர் அலுவலகம் ஹவுஸ்புல்லாக காட்சியளிக்கும். இதனால் இப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, வாகனங்கள் சிரமம் இன்றி செல்லும் வகையில் சுமார் 300 மீ., துாரத்திற்கு, 35 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்ட மத்திய அரசு, சாலை பாதுகாப்பு மேம்பாட்டுதிட்டத்தில் அனுமதிய ளித்துள்ளது.

இதேபோல், கோரம்பள்ளத்திலும் 35 கோடி ரூபாய் செலவில், சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கவும், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம், 70 கோடி ரூபாய் இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் மார்ச் மாதம் இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகளை மேற்கொள் வதற்கான முன்னேற்பாடு பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் சங்கர் தலைமையிலான, பணி யாளர்கள் குழுவினர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து

mmmmJan 22, 2022 - 03:01:36 PM | Posted IP 162.1*****

ithu thevai illathathu.. muthalla second gate, v v d signal, market pontra idankalil kattunga atahi pinnadi pathukkolvom

RaguJan 22, 2022 - 01:25:39 PM | Posted IP 162.1*****

VVD signal bridge ennachu

RaguJan 22, 2022 - 01:25:39 PM | Posted IP 162.1*****

VVD signal bridge ennachu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory