» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத் தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி: தந்தை கைது!

சனி 22, ஜனவரி 2022 11:00:07 AM (IST)

ஏரல் அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள இடையர்காடு கிராமம், சம்படி காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் ஐயப்பன் (42). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா  (32). இந்த தம்பதியருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. செல்வநரேஷ் (11), முருகவேல் (9), செல்வ கணேஷ் (6) என மூன்று மகன்கள் உள்ளனர்.  ஐயப்பன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரிடம் தகராறு செய்வாராம். இதுபோல் நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது ரேகா, அப்பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.  இதனால் ஆத்திரம் அடைந்த ஐயப்பன் தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதையறிந்த ரேகா தனது மூன்று குழந்தைகளையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா கொலை முயற்சி வழக்குப் பதிந்து ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory