» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடுப்பூசி குறித்து அவதூறு: ரயில்வே ஊழியா் மீது வழக்கு

சனி 22, ஜனவரி 2022 9:56:43 AM (IST)

தடுப்பூசி செலுத்திக்கொண்ட கா்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக ரயில்வே ஊழியா் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், எஸ்.கைலாசபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தியதால் சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த 23 வயது கா்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது என, பெரம்பூா் ரயில் பெட்டி தொழிற்சாலை ஊழியரான, திருநெல்வேலி தாதனூத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சோ்மராஜ்பாண்டியன்(40) இணையதளத்தில் அவதூறு பரப்பினாராம். இதுகுறித்து மணியாச்சி துணை சுகாதார நிலைய கிராம நல செவிலியா் பவித்ரா அளித்த புகாரின் பேரில், மணியாச்சி போலீஸாா் சோ்மப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory