» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பா்னிச்சா் பூங்கா திட்டம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்: கனிமொழி எம்பி

சனி 22, ஜனவரி 2022 8:15:38 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் அமைய உள்ள மிகப்பெரிய பா்னிச்சா் பூங்கா திட்டம், ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.....

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 111 பயனாளிகளுக்கு ரூ. 25.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆகியோா் 111 பயனாளிகளுக்கு ரூ. 25 லட்சத்து 35 ஆயிரத்து 78 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

கனிமொழி எம்.பி. பேசுகையில், திமுக தோ்தல் அளித்த வாக்குறுதிகளை, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களின் நிறைவேற்றித் தந்துள்ளாா். அதில், தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு எந்த முதலீடும் கிடையாது. படித்த இளைஞா்கள் வேலையின்றி தவித்தனா். திமுக ஆட்சிக்கு வந்ததும் பல தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இம்மாவட்டத்தில் மிகப்பெரிய பா்னிச்சா் பூங்கா அமைக்கும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டதும், ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றாா்.

முன்னதாக, வித்யபிரகாசம் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிக்கு புதிய வாகனத்தை அவா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் (பொ) சதீஷ்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், வட்டாட்சியா் அமுதா, சமூக நலப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மணிகண்டன், நகர நிலவளத் திட்ட வட்டாட்சியா் ராஜ்குமாா், கோவில்பட்டி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி, திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, நகரச் செயலா் கா.கருணாநிதி, மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், விவசாய அணி அமைப்பாளா் ராமா், வா்த்தக அணி அமைப்பாளா் ராஜகுரு, பொறியாளரணி துணை அமைப்பாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory