» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடம் : ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 21, ஜனவரி 2022 8:28:28 PM (IST)

மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் செய்யப்பட வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
2019 ஜனவரியில் நடந்த ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தின் போது ஒழுங்கு நடவடிக்கையாக பணி மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து பொதுமாறுதலுக்கு முன்பு அவர்களின் பள்ளியில் மீண்டும் பணியமர்த்திட வேண்டும். 1.11.21 முதல் ஆரம்ப நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டு அதன்பின்பு அப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பெருமளவில் நடந்துள்ளதால் 1.01. 22 மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் செய்யப்பட வேண்டும்.
கரோனா தொற்று காலத்தில் நோய் பரவலை தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நேரடி பயிற்சியினை தவிர்த்திட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பொது மாறுதல் தொடர்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு வட்டார தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் கலைவர் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் அந்தோணி கிறிஸ்டி, தேவராஜன்,. அந்தோணி வசந்தா, துணை செயலர்கள் பிரின்ஸ் ஜட்சன், ரோசாலி விசாலி, பாலமுருகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான் மனோகரன், வர்க்கீஸ்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத் தலைவர் ரோஸ்லீன அன்னலீலா, வட்டார செயலர் ஸ்டீபன் தாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் அண்டனி சார்லஸ், முன்னாள் வட்டாரத் தலைவர் செல்லப்பா, ஒய்வு பிரிவு தலைவர் பவுல்ராஜ், ஒய்வு பிரிவு அமைப்பாளர் சமாதான பீட்டர், ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் கல்வி மாவட்ட செயலர் ராஜசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான்சன் மாணிக்கதுரை, உள்ளிட்ட கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் விக்டர் மேரி கீதா நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)
