» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது: கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தல்!

வெள்ளி 21, ஜனவரி 2022 7:47:00 PM (IST)



தூத்துக்குடியில் எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது என வலியுறுத்தும் கையெழுத்து இயக்கதில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றனர். 

எல்ஐசி பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருவதற்கு ஏதிர்ப்பை  தெரிவிக்கும் வகையில் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், காப்பீட்டு கழகத்தினர் தற்போது கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் எல்ஐசி அலுவலகம் முன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் ஏபிசிவி.சண்முகம்  தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து நூற்றுகணக்கானவர்கள் எல்ஐசி பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட்டனர். இன்று மாலை காப்பீட்டுக்கழக  ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலாளர் ஆர்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில்  காப்பீட்டுக் கழக  தூத்துக்குடி கிளை ஊழியர் சங்கம் கிளைத் தலைவர்.எஸ்.ராமசாமி முன்னிலை வகித்தார். சார்பாளர் கௌரி மற்றும் பிச்சம்மாள் வரவேற்றனர்.

தொடர்ந்து காப்பீட்டு கழக  பங்குகளை விற்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில்  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழக சமூகநலன் மற்றும் மகளீர்உரிமைதுறை அமைச்சர் பி.கீதாஜீவன் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுத்து கொண்டனர்.

எல்ஐசி அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்நத பேனரில்  தங்களது கையெழுத்துகளை பதிவு செய்தனர். அவர்களை தொடர்ந்து திமுக செயற்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர  செயலாளர் ஆனந்த சேகரன், உள்ளிட்ட திமுக-வை பலர் கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுத்து கொண்டனர். இதில், எல்ஐசி சிவராம கிருஷ்ணன் உள்ளிடட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory