» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலை தேடி வந்த வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் - மூவர் கைது!

வியாழன் 20, ஜனவரி 2022 10:06:01 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலை தேடி வந்த வாலிபரை தாக்கிய 3பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி கணேசன் காலனி 2வது தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாரிச்செல்வம் (17). கிணறு தோண்டுவது போன்ற கூலி வேலைகள் செய்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக வேலை இல்லாதத்தில் பாலவிநாயகர் கோவில் தெருவில் ஸ்மார்ட் சிட்டி காண்ட்ராக்ட் வேலை நடப்பதால் அதில் வேலை தேடி அங்கு அடிக்கடி அந்த பகுதிக்கு சென்றுள்ளார். 

அப்போது ஸ்மார்ட் சிட்டி வேலைக்கான பொருட்களை திருட வந்ததாக கூறி இன்று அவரை அவதூறாக பேசி, இங்கு காணாமல் போன இரும்பு பொருட்களை திருடியது நீ தானே என்று கூறி இரும்பு ராடுகளால் 3பேர் அவரை சராமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த மாரிச்செல்வம்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் , கோரம்பள்ளம் ஹவுசிங்போர்டு, காலேப் மகன் சாம்குலின்ஸ் (37), தாளமுத்து நகர், கணபதி நகர் கணேஷ்குமார் மகன் சுரேஷ் (20) மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory