» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி எஸ்பிக்கு கரோனா தொற்று உறுதி!

வியாழன் 20, ஜனவரி 2022 9:56:25 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உள்பட 323 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 323 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்து 513 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 302 பேர் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 58 ஆயிரத்து 12 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 2076 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவரும், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவரும் கரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்து உள்ளது. இதனிடையே தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory