» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொங்கல் சீர்வரிசை பிரச்சனையில் புது மாப்பிள்ளை வெட்டிக்கொலை: மாமனார் வெறிச் செயல்

வெள்ளி 14, ஜனவரி 2022 10:41:27 AM (IST)

புளியங்குடி அருகே பொங்கல் சீர்வரிசை பிரச்சனையில் புது மாப்பிள்ளையை மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர் ராஜூ மகன் சரத்குமார் (27), மெக்கானிக். இவரும், கடையநல்லூர் அருகே உள்ள மேலகடையநல்லூரை சேர்ந்த கண்ணன் மகள் கற்பூரஜோதி (23) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் இவர்களது திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று கற்பூரஜோதியின் தாயார் தனது மகள் வீட்டுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் கொண்டு சென்று கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அந்த சீர்வரிசை பொருட்களை பார்த்த புதுமாப்பிள்ளை சரத்குமார், இவற்றை ஏன் இங்கு கொண்டு வந்தார்கள்? என்று கூறி மனைவி கற்பூரஜோதியிடம் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றவே கற்பூரஜோதி பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார். 

ஆனால், கற்பூரஜோதியை அவரது தாயார் அழைத்து சென்று விட்டதாக கருதி, சரத்குமார் மேல கடையநல்லூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். அப்போது அவருக்கும், மாமனார் கண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அரிவாளால் சரத்குமாரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சரத்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கண்ணன் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  புதுமாப்பிள்ளையை மாமனாரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

adaminJan 14, 2022 - 02:52:44 PM | Posted IP 108.1*****

ponnu kodutha maamanaar ellarum kadavul da loosu naaye

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory