» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன்கள் 2பேர் பலி : சுரண்டை அருகே சோகம்

வெள்ளி 14, ஜனவரி 2022 10:34:28 AM (IST)

சுரண்டை அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன்கள் 2பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம்  சாம்பவர்வடகரையைச் சேர்ந்தவர் அருள்மணி ராஜா (65). சாம்பவர் வடகரையை அடுத்த ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (62). நண்பர்களான இவர்கள் 2 பேரும் எலக்ட்ரீசியன்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் நேற்று  சுரண்டை அருகே வேலாயுதபுரத்தில் சுடலைமாட சுவாமி கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் பழுதடைந்த மோட்டாரை பழுது நீக்குவதற்காக சென்றனர்.

தோட்டத்தில் கிணற்றின் அருகில் உள்ள மோட்டார் அறையில் அருள்மணி ராஜா, சண்முகம் ஆகிய 2 பேரும் மோட்டாரை பழுது நீக்கி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் 2 பேரையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, சாம்பவர்வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த அருள்மணி ராஜா, சண்முகம் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்டத்தில் மோட்டாரை பழுது நீக்கியபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory