» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேருக்கு ஒமைக்ரான் உறுதி : ஒரே நாளில் 343 பேருக்கு கரோனா

வெள்ளி 14, ஜனவரி 2022 8:54:19 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 343 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 343 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 541-ஆக அதிகரித்து உள்ளது. 56 ஆயிரத்து 592 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆயிரத்து 532 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 69 வயது முதியவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி ஆகியோர் கரோனா பாதிப்பு காரணமாக இறந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 417-ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே ஒருவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும் சிலர் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களின் சளி மாதிரிகள் ஆய்வுக்கான அனுப்பப்பட்டது. இதில் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் 5 பேரும் முடிவு வருவதற்குள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam




Black Forest Cakes




Thoothukudi Business Directory