» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் விற்பனை நிலையம் திறப்பு விழா

வியாழன் 13, ஜனவரி 2022 5:05:11 PM (IST)தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் மீன் உணவுப் பொருட்கள் தயாரிப்பு இயந்திரத்தின் துவக்க விழா நடைபெற்றது. 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்பொருள் விற்பனை நிலையம் மற்றும் ரொட்டித்தூள் தோய்த்த மீன் உணவுப் பொருள் தயாரிப்பு இயந்திரம் ஆகியவை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் கடல்சார் உணவுப்பொருள் வணிக மையத்தின் கீழ் மீன்பதன தொழில்நுட்பத்துறையில் துணைவேந்தர் சுகுமார் துவக்கி வைத்தார். 

இவ்விழாவில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) ந. வ. சுஐாத் குமார். அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள் மற்றும் கடல்சார் உணவுப்பொருள் வணிக மையத்தின் தொழில் முனைவோர் கலந்து கொண்டார்கள்.  மேலும்.  கடல்சார் உணவுப்பொருள் வணிக மையத்தைச் சார்ந்த தொழில் முனைவோரால் உருவாக்கப்பட்ட தாவர அடிப்படையிலான முட்டை  குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை   உதவி பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் பா. கணேசன்  மற்றும் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory