» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் : எஸ்பி ஜெயக்குமார்

வியாழன் 13, ஜனவரி 2022 3:01:25 PM (IST)அரசு உத்தரவின்படி கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டுமே கடை உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் ஒமைக்கரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை & தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பாக இன்று (13.01.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்களப்பணியாளர்களாகிய தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புத்தாடை மற்றும் இலவச முககவசம் வழங்கினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தற்போது 15 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டுமே கடை உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். எல்லா வழிப்பாட்டு தலங்களுக்கும் நாளை (14.01.2022) முதல் வரும் 18.01.2022 அன்று வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. வரும் 16.01.2022 அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முருகபெருமாள், முத்துகிருஷ்ணன், மத்தியபாகம் காவல்நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் சுப்பிரமணியன், லயன்ஸ்டவுன் பங்குதந்தை பிரதீபன் லிபோன்ஸ், தூத்துக்குடி சிவன்கோவில் பிரதான அர்ச்சகர் கல்யாண சுந்தர சிவாச்சாரியர், அர்ச்சகர் ஹரிராகவன், கிரேஸண்ட் பள்ளி தாளாளர் மீராசா, சங்க நிர்வாகிகள் மார்ட்டின் ராபர்ட், சாம்ராஜ், உறுப்பினர்கள் சொக்கலிங்கம், முத்துகுமார், சுபாஷ், சுதர்சணா, மந்திரமூர்த்தி மற்றும் பொதுமக்கள், தூய்மை பணியார்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை & தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ், பொருளாளர் கணேசன், இணை செயலாளர் அண்ணாத்துரை, மாவட்ட செயலாளர் மார்க் மகேஷ், சங்க செயற்குழு உறுப்பினர் இம்மானுவேல் குணசிங் மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJan 13, 2022 - 03:15:18 PM | Posted IP 173.2*****

இந்த 50% என்பதைமுடிவு செய்ய என்ன அளவுகோல் வைத்திருக்கிறீர்கள் அய்யா? ஒரு கடைக்குள் எத்தனை பேர் அனுமதிக்கலாம் என்று இதற்கு முன்பு வரையறை இருந்ததா? அப்படி இல்லையென்றால் இந்த 50% என்பது எப்படி சாத்தியப்படும்?

CN.AnnaduraiJan 13, 2022 - 03:12:01 PM | Posted IP 162.1*****

அனைவருக்கும் தைத் திங்கள் பொங்கல் நல் வாழ்த்துகள்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory