» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளால் தினறும் தூத்துக்குடி : கண்டுகொள்ளாத போக்குவரத்து காவல்துறை!

வியாழன் 13, ஜனவரி 2022 11:03:11 AM (IST)தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளால் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனை சீர்செய்ய போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்க தூத்துக்குடி மாநகரை நோக்கி வந்த வன்னம் உள்ளனர். இதனிடையே தூத்துக்குடியில் கடந்த 2 ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி வி.இ. ரோடு, காய்கறி மார்க்கெட், பாலவிநாயகர் கோவில் தெரு, வி.வி.டி. ரோடு பகுதிகளில் சாலை பணிகளுக்காக கனரக வாகனங்களை நிறுத்தியுள்ளதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தைப் பொங்கல் நாளை நடைபெற உள்ள நிலையில் போக்குவரத்தை சீர் செய்யவேண்டிய காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் வேடிக்கை பார்த்து வருவது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

பென்சிJan 14, 2022 - 08:42:00 AM | Posted IP 108.1*****

ஸ்மார்ட் சிட்டி ப்ளான் வரைபடம் வெளியிட வேண்டும்.

தமிழன்Jan 13, 2022 - 11:02:14 PM | Posted IP 108.1*****

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அரசு விரைந்து முடிக்க வேண்டும். திட்டம் முடியும் வரையில் போக்குவரத்துகளை வேறு வழியில் மாற்றம் செய்ய வேண்டும். இது மக்களுக்கு கொஞ்சம் சிரமம் தான்! ஆனாலும் திட்டம் முடியும் போது அது மக்களுக்கு பெரிய வகையில் நன்மை தரும்.

ஏரியா காரன்Jan 13, 2022 - 12:47:47 PM | Posted IP 173.2*****

ஏற்கனவே பாதாள சாக்கடை 3 முறை சரியாக அமைக்க வில்லை அதற்கு ஸ்மார்ட் சிட்டி எப்படி அமைக்க போறாங்க ஊரெல்லாம் சாக்கடை சேமித்துவைத்து விடுகிறார்கள்? ஒரு இடத்தில உருப்படியாக வேலை செய்யாமல் அங்காங்கே செய்து கொண்டிருக்கிறார்கள் , சாக்கடை நீரை வெளியேற்றாமல் அப்படியே சிமெண்ட் கலவை கொட்டி விடுகிறார்கள், சுத்தமான இடத்தில சாக்கடை கொண்டு கொட்டி விடுகிறார்கள், இன்னும் ஸ்மார்ட் சிட்டி அரைகுறையாக அங்காங்கே நடந்து கொண்டியிருக்கிறதே , ஏற்கனவே ரோட்டில் சிமெண்ட் மேல மண் படிந்து உள்ளது. இன்னும் எதனை ஏரியா நாசமாகி போகிறது??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory