» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாஸ்க் அணியாத 995 பேருக்கு ரூ.1.99லட்சம் அபராதம்: ஊரடங்கு விதிகளை மீறிய 50 பேர் மீது வழக்குப்பதிவு

புதன் 12, ஜனவரி 2022 11:02:47 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத 995 பேருக்கு ரூ.1.99லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வர்களுக்கு தலா 500 அபராதமும் விதிக்கப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (11.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 50 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (11.01.2022) பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 206 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 146 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 126 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 55 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 112 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 238 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 66 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 46 பேர் மீதும் என மொத்தம் 995 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,99,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (11.01.2022) தூத்துக்குடி ஊரக உட் கோட்டத்தில் ஒருவர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 3 பேர் என சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு மொத்தம் ரூபாய். 2,01,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நம்மையும் காப்பாற்றி, நம்மால் பிறருக்கு தொற்று பரவாமல் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

மக்கள்Jan 12, 2022 - 02:43:38 PM | Posted IP 108.1*****

அந்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லதை செய்ய மாட்டிக்காங்க , புது மாஸ்க் வாங்கி குடுக்க மாட்டிக்காங்க, புது மாஸ்க் வாங்கிக்குடுக்க துப்பில்லை எல்லாம் பணம் பணம் பணம் பணம் .... போங்க

samuga aarvalarJan 12, 2022 - 11:52:17 AM | Posted IP 108.1*****

APPO BUS LA 60 PERUM MASK ANIYAMAL PORANGALE AVANGALUKKU YEPPO FINE PODUVINGA?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory