» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேராயர் நடவடிக்கையால் திருமண்டல நிர்வாகத்தில் குழப்பம் : நிர்வாகிகள் புகார்

புதன் 12, ஜனவரி 2022 8:03:32 AM (IST)

தூத்துக்குடி-நாசரேத் திருமன்டலத்துக்குள்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள ஊதியத்தை விரைந்து வழங்குவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தென் இந்திய திருச்சபையின் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தூத்துக்குடியில் அளித்த பேட்டி: "பேராயர் தேவசகாயத்தின் தன்னிச்சையான நடவடிக்கையால் திருமண்டல நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், கல்வித்துறை அதிகாரிகள் எந்த மேலாளர் நியமித்த தாளாளர்களை அங்கீகரிப்பது என்பது தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர். 

பேராயரின் இந்த செயவால் திருமண்டலத்தில் உள்ள 27 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 650-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 125-க்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு டிசம்பர் மாத ஊதியத்தை கல்வித் துறை நிறுத்தி வைத்துள்ளது. சினாடு நிர்வாகம் புதிய நிர்வாகிகள் தேர்வை அங்கீகரித்து விட்டதால் பெரும்பான்மையான நிர்வாகிகள் ஒப்புதலோடு நியமிக்கப்பட்ட மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங்கால் நியமிக்கப்பட்ட தாளாளர்கள் வழங்கியுள்ள ஊதிய பட்டியலுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். 

தொடர்ந்து திருமண்டலத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்தி வரும் பேராயர் தேவசகாயத்தின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து சிஎஸ்ஐ கிறிஸ்துவ அமைப்பின் தலைமைக்கு (சினாடு) புகார் தெரிவித்துள்ளோம். விரைவில் நல்லதொரு முடிவை தலைமை நிர்வாகம் எடுக்கும் என நம்புகிறோம் என்றார்.

பேட்டியின்போது, திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், பொருளாளர் மோகன், தொடக்க- நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், குருத்துவ ஊழிய நிலவரக்குழு செய லர் வெல்ற்டன் பள்ளிகளின் தொடர் பாளர் ஜான்சன் பால்டேனியல் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

சிவா கத்தார்Jan 12, 2022 - 09:45:34 AM | Posted IP 108.1*****

intha aala puditchi ulla podunka sir, romba kolappam pannuraru,ivarukku ethukku vendatha vela

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory