» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோயிலில் பொங்கல் திருநாளில் பக்தா்களுக்கு அனுமதி : பா.ஜ.க. கோரிக்கை

செவ்வாய் 11, ஜனவரி 2022 7:49:11 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் திருநாளில் உள்ளுா் பக்தா்களை சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, பாஜ.க தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவா் செந்தில்வேல், தமிழக முதல்வா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: பொங்கல் திருநாளில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று காலையில் வழிபட்ட பின்னா் அவரவா் வீடுகளில் பொங்கல் விட்டு வழிபடுவது உள்ளூா் மக்களின் வழங்கம். எனவே, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பொங்கல் தினத்தில் உள்ளுா் மக்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

sankarJan 11, 2022 - 01:58:46 PM | Posted IP 162.1*****

yes people going to TASMAC are dying?

balaJan 11, 2022 - 09:26:05 AM | Posted IP 108.1*****

Yevan Sethu ponalum parava illai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory