» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஜெயலலிதா 5ம் ஆண்டு நினைவு தினம்: அதிமுக, அமமுகவினர் மலர் மரியாதை!

ஞாயிறு 5, டிசம்பர் 2021 12:56:18 PM (IST)தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுக, அமமுகவினர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரம் 7வது தெரு மாவட்ட கழக அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர். ராஜசேகர், ஒன்றிய கழக செயலாளர்கள் காசிராஜன், ஜவகர், ராஜ் நாராயணன், அழகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட இலக்கிய அணி செயலளார் நடராஜன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

சி.த. செல்லப்பாண்டியன் அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் சிதம்பர நகர் 4 வது தெருவில் உள்ள அமைப்பு கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சேவியர், முருகன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஆண்ட்ரூ மணிபிள்ளை விநாயகம், ராஜாராம், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் ரத்தினம், முன்னாள் நகர அவைத்தலைவர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தூத்துக்குடியில் 30ஆவது வட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வட்ட பிரதி கீதா காசிலிங்கம் தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி தலைவர் வீரபத்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் உசிலை  பால்பாண்டியன், வட்டச் செயலாளர் காசிலிங்கம், முத்துமணி வட்ட இணைச் செயலாளர்  கலா, சங்கர், முரளி, கிருஷ்ணன், சங்கரேஸ்வரி, உஷா மங்கம்மாள், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory