» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் : அதிமுக புகார்!

ஞாயிறு 28, நவம்பர் 2021 8:16:14 PM (IST)தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் பார்வையாளர் லட்சுமி ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2022-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2022 நடந்து வருகிறது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி தொடர்பான அனைத்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். 

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணைய தலைமை நிர்வாக அலுவலரும், தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளருமான லட்சுமி கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்காளர் பட்டியலில் பிழையில்லாத நிலையை உருவாக்க அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அறிவுறுத்தினார். பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை பார்வைாளர் லட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் ஆட்சியருமான சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுகவினர் புகார்!

முன்னதாக அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் யு.எஸ்.சேகர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர்கள் கோமதி மணிகண்டன், முனியசாமி ஆகியோர் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் லட்சுமியிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக வாக்குச் சாவடிகள் அனைத்தும் வாக்காளர் சிறப்பு முகாம் பயண்பாட்டிற்கு ஏதுவாக இல்லை. இதன் காரணமாக கடந்து வாரம் நடைபெற்ற கூடுதல் சிறப்பு முகாம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதலாக சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். புதிய வாக்காளர்களாக சேரும் வயதுடையோர் கல்லூரிகளில் படிக்கும் காரணத்தால் கல்லூரிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி 28-வது வார்டு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை தி.மு.க.வினர் பள்ளிகளில் நடத்தாமல் அவர்களுக்கு ஏற்றார் போல் அவர்களது சொந்த இடத்தில் பூத் லெவல் அலுவலர்களை வைத்து நடத்துகின்றனர். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Black Forest Cakes

Thoothukudi Business Directory