» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சூதாட்டம், கஞ்சா, மது விற்பனை: 86 பேர் கைது!

ஞாயிறு 28, நவம்பர் 2021 7:48:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 86 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப் பொருட்கள், லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் மற்றும் பணம் வைத்து சூதாடியவர்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நேற்று தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். 

அதன்படி தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 10 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 9 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 9 வழக்குகளும், மணியாச்சி உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 11 வழக்குகளும், விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் 12 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் ஆக மொத்தம் 71 வழக்குகள் பதிவு செய்து 86 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 35 பேரும், புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 29 பேரும், சூதாட்டம் ஆடியவர்கள் 20 பேரும், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்குகளில் 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 179 மதுபாட்டில்கள், 1775 புகையிலைப் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.7 ஆயிரத்து 300 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் இதுவரை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 174 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory