» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாசுபடவில்லை: ஆதரவு கூட்டமைப்பினர் பேட்டி!

ஞாயிறு 28, நவம்பர் 2021 7:13:16 PM (IST)



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மாசு படவில்லை என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் மற்றும் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கத்தினர் கூறியுள்ளனர். 

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சார்ந்த சமூக ஆர்வலர் நான்சி வழக்கறிஞர் ஜெயம் பெருமாள் சாமிநத்தம் பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் முருகன் துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி,தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கத் தலைவர் தியாகராஜன் துணைத்தலைவர் பரமசிவன் நிர்வாகி கல்லை ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது சமூக ஆர்வலர் நான்சி கூறியதாவது "அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். அதில் காற்றின் மாசு அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி நகரின் மாசு குறித்து சிப்காட் உட்பட மூன்று இடங்களில் வைதக்கப்பட்டுள்ள அளவீட்டு கருவிகளின் மூலம் ஆய்வுகள் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரம் எப்போதும் ஒரே மாதிரியான மாசுபட்ட சூழ்நிலையிலேயே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போது எந்த அளவு மாசு இருந்ததோ அதே அளவு மாசு தான் தொடர்ந்து இருக்கிறது தூத்துக்குடி நகர மாசுபடுவதற்கு இங்கே இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள தூசுகளும் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்

இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்பி போராட செய்தி இந்த ஆலையை கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக மூட வைத்துள்ளனர் இந்த ஆலை மூடப்பட்டு அதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு போலி எதிர்ப்பு போராளிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்" என்று கூறினார்.

போலி போராட்டக்காரர்களின் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக கிடைத்த முதல் வெற்றி என்ற அவர், இந்த அரசு மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை ஆலையை மீண்டும் திறக்க இந்த கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

வழக்கறிஞர் ஜெயம் பெருமாள் கூறியதாவது "ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேட்டி அளிப்பவர்கள் மனு கொடுப்பவர்கள் பணத்திற்காக வருகிறார்கள் என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களில் பரவவிட்டுள்ளனர் இது வருத்தமளிக்கிறது என்றார். 

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்க தலைவர் தியாகராஜன் கூறியதாவது "தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தூத்துக்குடி மாசு குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தூத்துக்குடியின் உண்மைநிலையை தெரிவித்துள்ளது. எனவே மாசுக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என எங்களுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் முழுமையாக தெரியவந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே மக்களின் முதல்வர் பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் சிறக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து

ajithNov 30, 2021 - 12:12:40 PM | Posted IP 162.1*****

check cancer level

ஒருவன்Nov 29, 2021 - 10:10:34 PM | Posted IP 108.1*****

அப்போ வேற இடத்தில, வேற மாநிலத்தில் வைக்கவேண்டியது தானே..

M.Jeyaraj ManickamNov 29, 2021 - 07:58:00 PM | Posted IP 162.1*****

Why Steralite copper was closed in other places.

DurgaNov 29, 2021 - 07:19:38 PM | Posted IP 108.1*****

ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தூத்துக்குடிக்கு அருகில் அமைந்துள்ள மாதிரி உலகம் முழுவதும் உள்ள காப்பர் ஆலைகள் சிட்டி பகுதிகளில் அமைந்துள்ளதா அல்லது மக்கள் பயன்படுத்தாத பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதா என உண்மையான விளக்க விழிப்புணர்வு காணொழி காட்ச்சிகளை ஆதரவு மற்றும் எதிர்ப்பு தரப்பினர் எங்களை போன்றவர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். என்னை பொருத்தவரை ஸ்டெர்லைட்டை ஆலையை தூத்துக்குடி to மதுரை வரை உள்ள மக்கள் குடியிருப்புகள் மக்கள் பயன்படுத்தாத பகுதிகளில் அமைத்து செயல்பட்டால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆலையை நம்பி உள்ளோர்க்கும் கூடுதல் பயண் கிடைக்கும்.அவ்வாறு அமைக்கும் முன் உயிரிலந்த ஒவ்வொருவருக்கும் தலா பத்து கோடி வழங்கவேண்டும்.

செல்வகுமார்Nov 29, 2021 - 12:48:30 PM | Posted IP 162.1*****

ஸ்டெர்லைட் ஆலை முடின பின்பு அறிக்கை தயார் செய்தால் அப்படித்தான் இருக்கும், இதை சொல்ல ஸ்டெர்லைட் நிறுவனம் எவ்வளவு பணம் உங்களுக்கு கொடுத்தது என்று சொல்லவில்லை? மூன்று வருடமாக தூத்துக்குடியில் மழை பெய்யும் அளவை பார்த்தாலே தெரியும், இவர்களை என்ன சொல்ல

MakkalNov 28, 2021 - 10:30:23 PM | Posted IP 108.1*****

Ivunga vittukku pakathula mathirunga

K.ganeshanNov 28, 2021 - 09:50:47 PM | Posted IP 162.1*****

குறைந்த பட்சம் மக்கள் இப்போது உண்மையை உணர்ந்துள்ளனர். நிச்சயமாக தீர்ப்பு ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory